பாழடைந்த வீட்டிலிருந்து- பெண்ணின் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை ஓட்டமாவடி பதுரியா நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் செம்மண்ணோடை, கொண்டயன்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சகோதரனின் மகன் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

You might also like