பிணை­முறி மோசடி விவ­கா­ரம்; அர்ஜுன் அலோ­சி­யஸ் தடுப்­பில்

விசா­ரணை ஆணைக்­குழு நேற்று அதி­ரடி

பேர்ப்­பச்­சு­வல் ட்ரச­ரீஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் அர்ஜுன் அலோ­சி­யஸ், மத்­திய வங்­கி­யின் பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­ளும் அரச தலை­வர் ஆணைக்­குழு அமர்­வில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சாட்­சி­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் விடு­விக்­க­ லாம் என்ற கார­ணத்தாலேயே அவர் விசா­ரணை நிறை­வ­டை­யும்­வரை தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று ஆணைக்­குழு தெரி­வித்­தது.

பேர்ப்­பச்­சு­வல் ட்ரச­ரீஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் அர்­ஜூன் அலோ­சி­யஸ் நேற்று ஐந்­தா­வது நாளா­க­வும் மத்­திய வங்­கி­யின் முறி மோசடி தொடர்­பில் விசா­ரணை செய்­யும் அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வில் முன்­னி­லை­யா­னார்.

அர்­ஜூன் ஆலோ­சி­யஸ் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு அவர் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி காமினி மாரப்­பன எதிர்ப்பை வெளி­யிட்டு, ஆணைக்­கு­ழு­வில் வாதிட்­டார்.

அர்­ஜூன் அலோ­சி­யஸ் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு முன்­னர் சத்­தி­யக் கட­தாசி வழங்­க­வேண்­டும் என்று ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டமை மற்­றும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரின் சாட்­சி­யங்­க­ளுக்கு அப்­பால் அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வி­லும் சாட்­சி­யம் வழங்க உத்­த­ர­விட்­டமை போன்ற விட­யங்­க­ளுக்கு எதிர்ப்பு வெளி­யிட்டு அவர் சார்­பான சட்­டத்­த­ரணி காமினி மாரப்­பன வாதா­டி­யி­ருந்­தார்.

இருந்­த­போ­தி­லும் சாட்­சிப் பாது­காப்பு மற்­றும் தக­வல்­களை முறை­யா­கப் பேணு­கின்­றமை தொடர்­பில் அர்­ஜூன் அலோ­சி­யஸ் மீது எழுந்­துள்ள சந்­தே­கத்­தின் கார­ண­மா­கவே அவரை விசா­ர­ணை­க­ளின்­போது வெளியே செல்ல அனு­ம­தி­ய­ளிக்க முடி­யா­தென ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

பிணை­முறி தொடர்­பில் விசா­ரணை செய்­யும் அரச தலை­வர் ஆணைக்­குழு பேர்ப்­பச்­சு­வல் ட்ரச­ரீஸ் நிறு­வ­னத்­தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி கசுன் பலி­சேன் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு நேற்­றுக் காலை 10 மணிக்கு ஆரம்­ப­மா­கி­யது.

2013ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016ஆம் ஆண்டு வரை­யில் பேர்ப்­பச்­சு­வல் ட்ரச­ரீஸ் நிறு­வ­னத்­தின் சார்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட கணக்­கு­கள் அனைத்­தும் இதன்­போது மீளாய்­வுக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

You might also like