side Add

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது – ஆட்சியாளர்களின் பொறுப்பு!!

பலா­லி­யில் 6 ஆயி­ரத்து 500 ஏக்­கர் காணி­யைப் படை­யி­னர் சட்­டத்­துக்கு விரோ­த­மான வகை­யில் சுவீ­க­ரித்து வைத்­துள்­ள­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எழுத்து மூலம் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார். பலாலி வானூர்தி நிலை­யத்­தின் தேவை­க­ளுக்­கென்றே இந்­தப் பெருந்­தொ­கை­யான காணி­கள் சுவீ­க­ரித்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்.

பலாலி வானூர்தி நிலைய பரவலாக்கத்துக்காக
அப­க­ரிக்­கப்­பட்ட தமி­ழர் நிலங்­கள்

குறு­கிய நிலப்­பி­ர­தே­சத்­தில் யாழ்.குடா நாட்டில் 6ஆயி­ரம் ஏக்­கர் காணி என்­பது மிகப்­பெ­ரிய நிலப்­ப­ரப்­பா­கும். அது­வும் வலி­கா­மம் வடக்­கில் அமைந்­துள்ள செழிப்­பான பிர­தே­சத்­தில் இந்­தக் காணி­கள் அமைந்­துள்­ளன. அந்­தக் காணி­க­ளில் வாழ்ந்த பொது­மக்­கள் சுமார் 28 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் அங்­கி­ருந்து இடம் பெ­யர்ந்து வெவ்­வேறு இடங்­க­ளில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

இதைப் போன்ற அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­ க­ளுக்­குத் தீர்­வைக் காணாது இனப்­பி­ரச்­சினை தீரு­மென எதிர்­பார்ப்­பது சாத்­தி­ய­மில்­லாத விட­ய­மா­கும்.

காலங்­க­டந்து சந்­தி­ரி­கா­வுக்கு
பிறந்­துள்ள ஞானம்
இதே­வேளை தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை ­க­ளுக்­குத் தீர்வு காணப்­ப­டாதுவிட்­டால், நாட்­டில் மீண்­டும் சிக்­கல் நிலை­யொன்று உரு­வா­க­லா­மென எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார் முன்­னாள் அரச தலை­வ­ரான சந்­தி­ரிகா அம்­மை­யார். தாம் ஆட்­சிக்கு வந்­தால் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்டு விடு­மெ­னக் கூறி­ய­வர்­தான் இந்­தச் சந்­தி­ரிகா. இதை நம்­பிய தமி­ழர்­கள் தேர்­த­லில் இவ­ருக்கு அதிக வாக்­கு­களை அள்ளி வழங்­கி­னர்.

இதன் கார­ண­மாக இலங்­கை­யின் அரச தலை­வர் தேர்­தல் வர­லாற்­றில் அதிக வாக்­கு­க­ளைப் பெற்று இவ­ரால் வெற்­றி­ பெற முடிந்­தது. ஆனால் தேர்­தல் வெற்­றிக்­குப் பிறகு ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளைப் போன்று இவர் தம்மை மாற்­றிக்­கொண்டு விட்­டார். தீர்­வைக் காண்­ப­தற்­குப் பதி­லாக போரைத் தீவி­ ரப்­ப­டுத்­து­வ­தி­லேயே இவர் குறி­யா­கச் செயற்­பட்­டார். யாழ்ப்­பா­ணக் குடா­நாடு இவ­ரது ஆட்­சிக் காலத்­தி­லேயே படை­யி­ன­ரின் கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்­தது. தம்­மை­யொரு சமா­தான தேவ­தை­யாக வர்­ணித்து ஆட்­சிக்கு வந்த சந்­தி­ரி­கா­வி­னால் இறு­தி­வரை நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை.

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­யோடு தொடர்­பு­டைய பல விட­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன. நிலத்­தில் மட்­டு­மல்­லாது, கட­லி­லும் தமி­ழர்­கள் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். வௌியி­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் வட­ப­கு­தி­யில் கட­லில் அத்­து­மீ­றித் தொழில்­க­ளில் ஈடு­ப­டு­வ­தால் வட பகுதி மீன­வர்­கள் தமது வாழ்­வா­தா­ரத்தை இழந்து தவிக்­கின்­ற­னர். அத்­து­ மீ­றிச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்­குப் படை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்­புக் கிடைப்­ப­தால் அவர்களை எதிர்த்து எது­வுமே செய்­ய­மு­டி­ய­வில்லை. இந்­திய மீன­வர்­க­ளின் அத்து மீறல்­கள் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டி­னுள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலை­யில், தென்­ப­குதி மீன­வர்­க­ ளைக் கட்­டுப்­ப­டுத்த எவ­ரா­லும்­மு­டி­ய­வில்லை. அரசு இந்த விட­யத்­தில் தீர்க்­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளா­து­விட்­டால் இன­மோ­தல் ஒன்று ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க முடி­யாது.

போர் முடி­வுக்க வந்து 10 ஆண்­டு­கள்
காலம் முடி­வ­டை­யும் நிலை­யில்
தமி­ழர்­க­ளது நிலை­யில் மாற்­றம்
எது­வு­மில்லை
இதை­விட போர் ஓய்ந்து 10ஆண்­டு­கள் நெருங்­கு­கின்ற நிலை­யி­லும் போர் கார­ண­மாக இடம் பெ­யர்ந்த மக்­க­ளில் ஒரு பகு­தி­யி­னர் தமது சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்ப முடி­யாத நிலை­யில் இன்­ன­மும் குடா­நாட்­டின் வேறு இடங்­க­ளில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளது சொந்த நிலங்­க­ளில் வீடு­களை அமைத்து இவர்­க­ளைக் குடி­ய­ மர்த்­து­வது அர­சின் தலை­யாய கட­மை­யா­கும். ஆனால் இன்­று­வரை அரசு இதில் தவ­றி­விட்­டது என்றே கூற வேண்­டும்.

அரச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்ப்­புக்­க­ளைச் சமா­ளித்து துணி­வு­டன் செய­லாற்­றும்­போ­து­தான் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண­மு­டி­யும். கூட்­டு­ எ­தி­ர­ணி­யி­ன­ரின் சல­ச­லப்­புக்கு அஞ்­சி­னால் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தென்­பது இய­லாத காரி­ய­மாக ஆகி­வி­டும். ஆகவே அவர் தமது எஞ்­சி­யுள்ள காலத்­தி­லா­வது மனத்­து­ணி­வு­டன் செய­லாற்­று­வ­தற்கு முன்­வர வேண்­டும்.

இன­வா­த­மும், மத­வா­த­மும் இந்த நாட்டைப் பீடித்து நிற்­கும் வரை­யில் எந்­த­வொரு விமோ­ச­ன­மும் நாட்­டுக்­குக் கிடைக்­கப்­போ­வ­ தில்லை. அதி­லும் அர­சி­யல்­வா­தி­கள் இன­வா­தி­க­ளா­கச் செயற்­ப­டும் வரை­யில் எந்­த­வொரு அர­சி­யல் மாற்­றத்­தை­யும் இங்கு காண­மு­டி­யாது.

தமிழ் மக்­க­ளின் காணி­களை அடாத்­தா­கப் பிடித்து வைத்­துக்­கொண்டு அவர்­களை அலைய விடு­வ­தும், அவர்­கள் வழக்­க­மா­கத் தொழில் செய்­கின்ற கட­லில் இடை­யூ­று­களை விளை­விப்­ப­தும் பிரச்­சி­னை­கள் தொட­ர்வ­தற்­குத்­தான் வழி­வ­குக்­குமே தவிர, தீர்­வுக்கு வழி­வ­குக்­காது என்­பதை ஆட்­சி­யா­ளர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

இதை­வி­டுத்து, ஆட்­சி­யில் இருக்­கும் வரை­யில் எதை­யும் செய்­யா­மல் இருந்­து­விட்டு, அதை­விட்டு வில­கிய பின்­னர் அறி­வுரை கூறு­வ­தும், வருத்­தம் தெரி­விப்­ப­தும் பயன் எதை­யும் தரப்­போ­வ­தில்லை.
தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தீரு­மென்ற நம்­பிக்கை தற்­போ­தைய நிலை­யில் அருகி வரு­வ­தையே காண முடி­கின்­றது. அந்த நம்­பிக்கை முற்­று­மு­ழு­தாக அற்­றுப்­போக வழி­வ­குக்­காது, அதற்­குப் புத்­து­யிர் ஊட்­ட­வேண்­டி­ய­வர்­கள் இலங்­கை­யின் ஆட்­சி­யா­ளர்­கள்­தான். செய்­வார்­களா?

You might also like