பிரபல நடிகருக்கு வில்லனான சமுத்திரகனி!!

சமுத்திரகனி அடுத்ததாக நடிக்கும் படத்தில், பிரபல நடிகருக்கு வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, ஜெயராம், தபு, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இப்படத்துக்கு, தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

You might also like