புகைத்தலால் 400 பேர் உயிரிழப்பு- சுகாதார அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் புகைத்தல் காரணமாக வாரமொன்றுக்கு சுமார் 400 பேர் உயிரிழக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன விபத்து, தற்கொலை, எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையிலும் பார்க்க இந்த உயிரிழப்பு அதிகரிப்பாகும்.

புகைத்தலால் உயிரிழக்கும் மற்றும் நோய்களுக்கு உள்ளாகும் நபர்களுக்காக சுமார் 300 பில்லியன் ரூபா வருடாந்தம் செலவிடப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like