side Add

புதிய நிர்வாகம் தெரிவு!!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் ஆளுநர் சபைக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

லங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் இளைஞர் சபையின் ஜனநாயகத் தலைவராக லக்சுயனும், செயலாளராக நவநீதனும், பொருளாராக அனுசாவும், உபதலைவராகவும் துவராகனும் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அறுவரும் தெரிவு செய்யப்பட்டனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட இடைக்கால இளைஞர் சபையின் தலைவர் கே. லக்சுயன் தலைமையில் தெரிவு இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் கிளிநொச்சிக்கிளை செயலாளர் த.சேதுபதி மற்றும் கிளைநொச்சி கிளையின் கிளை நிறைவேற்று அலுவலரும் இதில் கலந்து கொண்டார்.

You might also like