புதுக்குடியிருப்பில் வறட்சி உதவி வழங்கல்

45

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக இடா் முகா­மைத்­துவ மைய நிலை­யத்­தி­னால் வறட்சி உதவி வழங்­கப்­ப­ட்டு வருகின்றது.
இதன் படி பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பயன்ப­டுத்திக் கடந்த ஐந்து நாள்­கள் கிரா­மத்­தைத் துப்­ப­ரவு செய்து அவர்­க­ளுக்­கான உண­வுப்­பொ­தி­கள் கடந்த 7 ஆம் திக­தி­மு­தல் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 28 ஆயி­ரத்து 834 குடும்­பங்­க­ளுக்கு இந்த உண­வுப்­பொ­ருள்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன, ஒட்­டு­சுட்­டான்­பி­ர­தே­சத்­தில் இந்த வறட்சி நிவா­ர­ணம் வழங்கி முடிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாதம் 15 ஆம் திக­திக்கு முன்­னர் மாவட்­டம் முழு­வ­தற்­கும் வழங்கி முடிக்­க­வேண்­டும் என இடா் முகா­மைத்­துவ மைய நிலைய முல்­லைத்­தீவு உதவிப் பணிப்பாளா் தெரி­வித்­தார்.

மூன்­றுக்கு குறை­வான அங்­கத்­த­வர்­க­ளைக் கொண்ட குடும்­பங்­க­ ளுக்கு 4 ஆ­யி­ரம் ரூபா பெறு­ம­தி­யான பொதி­யும், மூன்று அங்­கத்­த­வர்­க­ளுக்கு மேல் உள்­ள­வர்­க­ளுக்கு 5 ஆ­யி­ரம் ரூபா பெறு­ம­தி­யான பொதி­ யும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

அரிசி, பருப்பு, சீனி, மிள காய்த்தூள், மா, உரு­ழைக்­கி­ழங்கு, முட்டை உள்­ளிட்ட உணவுப் பொருள்­களே பொதி­யிடப்­பட்­டு வழங்கப்படுகின்றன.

You might also like