பெட­ரர் அதி­ரடி!!

உலக சம்­பி­யன்­ஷிப் ரென்­னிஸ் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் அபா­ர­மான வெற்­றியைப் ­பெற்­றார் சுவிற்­சர்­லாந்து வீரர் பெட­ரர்.

பன்­னாட்­டுத் தரப்­ப­டுத்­த­லில் முதல் 8 இடங்­க­ளில் உள்ள வீரர் ­க­ளுக்கு இடை­யில் ஆண்­டின் இறு­தி­யில் தொட­ரொன்று நடத்­தப்­ப­டும். இந்­தத் தொடர் உலக சம்­பி­யன்­ஷிப் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த வரு­டத்­துக்­கான தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.

நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் பெட­ரரை எதிர்த்து தென்­னா­பி­ரிக்க வீரர் அன்­டர்­சன் மோதி­னார்.

முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 6:4, 6:3 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றார் பெட­ரர்.

You might also like