பேரீட்சை லட்டு!!

தேவையானவை

பேரீட்சம் பழம் – 15

கொக்கோதூள் – 2 மேசைக்கரண்டி

தேன் – 2 – 3 மேசைக்கரண்டி

முந்திரி, பாதாம் – 1/2 கப்

தேங்காய் துருவல் – 1/2 கப்

செய்முறை

பேரீட்சை பழங்களை எடுத்து விதையை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

அதனுடன் முந்திரி, பாதாம் சேர்க்கவும்

கொக்கோ தூள், தேன் சேர்த்து நன்கு பிசையவும்

பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

அதனை தேங்காய் துருவலில் போட்டு எடுக்கவும்.

You might also like