பொலித்தீன் பாவனையை நிறுத்துதல் தொடர்பில் கருத்தமர்வு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள் பாவனையை முற்றாக நிறுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்திலும் இன்று கருத்தமர்வுகள் நடத்தப்பட்டன.

கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி நகரசபை பொது சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ் மற்றும் கோர் நிறுவன வளவாளர்களால் கருத்துரைகளை வழங்கினர்.

பலநோக்குக்கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மற்றும் கிளைகளில் பணியாற்றுவோர், சாவகச்சேரி பிரதேச கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் இதில் கலந்து பயன்பெற்றனர்.

You might also like