பொலிஸ் தடுப்பிலிருக்க ஆசைப்பட்ட பாட்டி!!

பிரிட்டனில் வசித்து வரும் 93 வயது பாட்டி தனது விபரீத ஆசையை பேத்தி மூலம் மறைமுகமாக நிறைவேற்றியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஜோஷ்சி பேர்ட்ஸ் என்பவருக்கு தன்னை பொலிஸார் கைது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தனது கடைசி ஆசையை பேத்தியிடம் கூறியுள்ளார்.

பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைத்த பேத்தி பொலிஸ் நிலையம் சென்று தனது பாட்டியைக் கைது செய்யும்படி கேட்டுள்ளார். ஆனால், பொலிஸார் மறுத்துள்ளனர். பாட்டியின் கடைசி ஆசை இது என பேத்தி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினார்.

திடீரென பாட்டியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

You might also like