பொள்ளாச்சியில் நடந்த கொடூரம்- ஆபாச வீடியோவால் பெரும் சர்ச்சை!!

தமிழகத்தை அதிர வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர், தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று முறையிட்டார். பொள்ளாச்சி ஊஞ்சவேலாம் பகுதிக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை வீடியோ எடுத்து மிரட்டினார்கள் என்று முறைப்பாட்டில் தெரிவித்தார்.

இதையடுத்து பொள்ளாச்சி பொலிஸார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்ததனர். செஇந்த தனிப்படை விசாரணையில் மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவானார். பொலிஸார் சில நாள்களில் குறித்த நபரையும் கைது செய்தனர். தற்போது பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். காதலை காரணம் காட்டி, இவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமான சின்னப்பபாளையம் பண்ணை வீட்டில் தான் இத்தனை சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அங்கு காதலன், நட்பு என்ற போர்வையில் பெண்களை அழைத்து செல்லும் இவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்துள்ளனர்.அதன்பின் அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்யுள்ளனர்.

இந்தக் கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 7 வருடமாக இப்படி மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

பெண்களை பாலியல் வன்முறை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெற்று உள்ளனர். பணம் இல்லாத பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறை செய்துள்ளனர். இப்படி பாதிக்கப்பட்டது சில பெண்கள் கிடையாது.

200க்கும் அதிகமான பெண்கள் இப்படி பாலியல் வன்முறை செய்யப்பட்டு, மிரட்டப்பட்டு உள்ளனர். அதேபோல் இவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருந்துள்ளனர். பெண்களை மிரட்டி அவர்களை அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையிலும் இவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர். கோவையை சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த பிரச்சனை சில முக்கிய காரணங்களுக்காக மீண்டும் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. இவர்களிடம் இருந்து பொலிஸார் இதுவரை 1500 வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர். இதில் இருப்பது எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

You might also like