side Add

போதி மயானத்திலிருந்து- இராணுவத்தினர் வெளியேற்றம்!!

 

போதி மயானத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெயியேறியுள்ளனர்.

இதையடுத்து மயானத்தை அபிவருத்தி செய்வதற்கான நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.

வலி-.தென்மேற்கு மானிப்பாய் பிரதேசத்தில் முதலாம் வட்டாரத்திலுள்ள போதி மயானக் காணியில் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டு நிலை கொண்டிருந்தனர்.

பல வருடங்களாக நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு அப்பகுதி மக்கள் பிரதேதச சபையைக் கோரியிருந்தனர்.

குடாநாட்டில் அரச காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதேச சபைக்குச் சொந்தமான போதி மயானத்தில் முகாமிட்டு நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த வாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

இதையடுத்து இப்பகுதிகளின் நலன்கருதி மேற்படி மயானத்தை அபிவிருத்தி செய்யுமாறு முதலாம் வட்டார உறுப்பினர் திருமதி சிவனேஸ்வரி தவிசாளரை கோரியதை தொடர்ந்து மயானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

You might also like