side Add

போதைப்பொருள் தடுப்பு வாரம் தொடர்பில் முன்னாயத்தம்!!

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

“போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்“ என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 125 பாடசாலைகளை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இது பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலில் அரச திணைக்கள அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் என சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

You might also like