போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி – நாகஹமுல்ல பிரதேசத்தில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ​பொலிஸார் அனுமதித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சந்தேகநபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கைது செய்ய முன்னர் குறித்த சந்தேகநபர் தன்னிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பைக்கற் ஒன்றை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like