போதைப் பொருள்­கள் உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளில் இந்­தி­யா­வும் ஒன்று – ட்ரம்ப்

0 24

சட்­ட­வி­ரோ­த­மா­கப் போதைப் பொருள்­களை உற்­பத்தி செய்­கின்ற நாடு­க­ளில் இந்­தி­யா­வும் ஒன்று என்று அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் குறிப்­பிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் வெள்ளை மாளி­கை­யில் நடந்த கூட்­டம் ஒன்­றில் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் பங்­கேற்­றுப் பேசி­யி­ருந்­தார். அதன்­போதே அவர் இவ்­வாறு கூறி­யி­ருக்­கி­றார்.

‘சட்­ட­வி­ரோ­த­மா­கப் போதைப் பொருள்­களை உற்­பத்தி செய்து அவற்­றைப் பிற நாடு­க­ளுக்­குக் கடத்­தும் 21 நாடு­களை உள்­ள­டக்­கிய பட்­டி­ய­லுக்­குள் இந்­தி­யா­வும் உள்­ள­டங்­கி­யுள்­ளது.

போதைப் பொருள்­கள் கடத்­தும் ஆசிய நாடு­க­ளில் பாகிஸ்­தான், மியான்­மர், ஆப்­கா­னிஸ்­தான் போன்ற நாடு­கள் முக்­கிய நாடு­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. பகா­மஸ், பெலிஸ், போல்­வியா, கொலம்­பியா, கோஸ்­டோ­ரிக்கா, ஈக்­கு­வே­டார், எல்­சர்­வே­டார், கௌத­மாலா, ஹைதி, ஹோண்­டு­ரஸ், ஜமேக்கா, லாவோஸ், மெக்­சிக்கோ, பனாமா, பெரு, நிக­ரா­குவா, வெனி­சு­வெலா ஆகிய நாடு­க­ளும் போதை பொருள்­க­ளைச் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடத்­தும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இடப்­பெற்­றுள்­ளன.

கொலம்­பியா, மெக்­சிகோ, ஆப்­கா­னிஸ்­தான் ஆகிய நாடு­க­ளில் சட்­ட­வி­ரோ­த­மா­கப் போதைப் பொருள்­கள் உற்­பத்தி செய்­வது அதி­க­ரித்து வரு­வது ஆழ்ந்த கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது’ எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் ட்ரம்ப்.

மேலும், ‘மெக்­சி­கோ­வி­லி­ருந்து வரும் ஹெரா­யின் மற்­றும் கொலம்­பி­யா­வி­லி­ருந்து வரும் கோகைன் மூல­மும் அமெ­ரிக்­கா­வில் ஆண்­டு­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­கள் பறி போகின்­றன. அமெ­ரிக்கா தொடர்ந்து பன்­னாட்டு அள­வில் போதைப் பொருள் உற்­பத்தி மற்­றும் போதை பொரு­ள­கள் கடத்­த­லுக்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­கும்’ என்று ட்ரம்ப் மேலும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் குறிப்­பிட்­ட­தற்­க­மைய இந்­தி­யா­வில் சட்­ட­வி­ரோ­த­மான போதைப் பொருள் உற்­பத்தி மற்­றும் அதைச் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடத்­து­வது எனப் பல­பி­ரச்­சி­னை­கள் உச்ச அள­வில் இருப்­ப­தா­லேயே இந்­தியா இத்­த­கை­ய­தொரு பட்­டி­ய­லுக்­குள் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­வின் அயல்­நா­டு­கள் கடத்­து­கின்ற போதைப் பொருள்­க­ளால் அமெ­ரிக்­கர்­கள் பாதிப்­ப­டை­வ­தாக ட்ரம்ப் குறிப்­பி­டு­வ­தைப்­போன்றே, இந்­தி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மா­க­வும், ஆங்­கீ­கா­ரத்­து­ட­னும் இலங்­கைக்­குள்(குறிப்­பாக வட­ப­கு­திக்­குள்) நுழைக்­கப்­ப­டு­கின்ற போதைப் பொருள்­கள் கார­ண­மான இலங்­கை­யும் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­கி­றது.

ட்ரம்ப் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பதை, போதைப் பொருள்­கள் மூலம் இலங்­கை­யில் இடம்­பெ­றும் குற்­றங்­க­ளுக்­குச் சாவுத் தண்­டணை அளிப்­ப­தற்கு அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால உத்­தே­சித்து வரு­வ­து­ட­னும், யாழ்ப்­பா­ணத்­தில் தின­மும் நடக்­கின்ற அநீ­திச் செயல்­க­ளு­ட­னும் பொருத்­திப் பார்க்­கை­யில் ட்ரம்ப் கூறி­ய­தி­லுள்ள உண்­மைத்­தன்மை வெளிப்­ப­டு­கின்­றது என்று குறிப்­பி­டு­கின்­ற­னர் அர­சி­யல் புலத்­தி­னர்.

You might also like