போராடித் தோற்­றது  அயர்­லாந்து அணி 

கிரிக்­கெட் வர­லாற்­றில் தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக விளை­யா­டிய அயர்­லாந்து, அதைத் தோல்­வி­யு­டன் முடித்­துக்­கொண்­டது. எனி­னும் ஆட்­டத்­தின் 5 நாள்­கள் வரை தாக்­குப்­பி­டித்­தமை, இன்­னிங்ஸ் தோல்­வியை தவிர்த்­தமை உள்­ளிட்ட விட­யங்­க­ளில் அந்த அணிக்கு பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன.

டெஸ்ட் அந்­தஸ்­தைப் பர­வ­லாக்­கம் செய்ய முடி­வெ­டுத்த பன்­னாட்டு கிரிக்­கெட் சபை, ஆப்­கா­னிஸ்­தான் மற்­றும் அயர்­லாந்து அணி­க­ளுக்கு புதி­தாக டெஸ்ட் அந்தஸ்தை வழங்­கி­யது. இதன்­படி தனது முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்தை கடந்த 11ஆம் திகதி பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக எதிர்­கொண்­டது அயர்­லாந்து.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற அயர்­லாந்து முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்­தான் அணி 9 இலக்­கு­களை இழந்து 310 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.

அதி­க­பட்­ச­மாக அஸ்­ரப் 83 ஓட்­டங்­க­ளை­யும், சபிக் 62 ஓட்­டங்­க­ளை­யும், சடப்­கான் 55 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் முஸ்­தாக் 4 இலக்­கு­க­ளை­யும், தொம்­சன் 3 இலக்­கு­க­ளை­யும், ரன்­கி ன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய அயர்­லாந்து 130 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. கெவின் ஓ பிரைன் அதி­க­பட்­ச­மாக 40 ஓட்­டங்­க­ளை­யும், வில்­சன் 33 ஓட்­டங்­க­ளை­யும், ஸ்ரேர்­லிங் 17 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் அப்­பாஸ் 4 இலக்­கு­க­ளை­யும், சடப்­கான் 3 இலக்­கு­க­ளை­யும், அமீர் 2 இலக்­கு­க­ளை­யும், அஸ்­ரப் ஓல் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.
களத்­த­டுப்­பில் ஈடு­ப­டத் தகு­தி­யில்­லாத நிலை­யில் இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கத் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டப் பணிக்­கப்­பட்­டது அயர்­லாந்து.

அந்த அணி 339 ஓட்­டங்­க­ளைக் குவித்து இன்­னிங்ஸ் தோல்­வி­யைத் தவிர்த்­த­து­டன் 159 ஓட்­டங்­கள் கூடு­த­லா­க­வும் பெற்­றது. கெவின் ஓ பிரைன் 118 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். அயர்­லாந்து அணிக்­காக முத­லா­வது டெஸ்ட் சதத்­தைப் பதி­வு­செய்­த­வர் என்ற சிறப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது. தொம்­சன் 53 ஓட்­டங்­க­ளை­யும், ஜொய்ஸ் 43 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் அப்­பாஸ் 5 இலக்­கு­க­ளை­யும், அமீர் 3 இலக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். 160 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பாகிஸ்­தான் 5 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. இமாம் உல் ஹக் 74 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close