போர் வேண்டாம் சமாதானம் பேசுவோம்

முன்னாள் அரச தலைவர் தெரிவிப்பு

போர் வேண்­டாம் வாருங்­கள் சமா­தா­னம் பேசு­வோம் எனப் பிர­பா­க­ர­னுக்கு அழைப்பு விடுத்­தேன் ஆனால் பிர­பா­க­ரன் அதற்கு செவி­சாய்க்க­வில்லை என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரிஸ் உள்­ளிட்ட சில­ரு­டன் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தனது இல்­லத்­தில் கலந்­து­ரை­யா­டலை அண்­மை­யில் மேற்­கொண்­டார். இதன்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பிர­பா­க­ர­னுக்கு நான் அனுப்­பிய செய்­தி­யில் விரும்­பி­னால் பிர­பா­க­ரன் கொழும்­புக்கு வர­லாம். அல்­லது நான் கிளி­நொச்­சிக்கு வரத் தயார் என­வும் எழு­தி­யி­ருந்­தேன். ஆயி­னும் அதற்கு சாத­க­மான பதில் கிடைக்­காத கார­ணத்­தால் தான் அவரை கொலை செய்ய வேண்­டிய நிலமை உரு­வா­கி­யது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்த போர் ஒரு இலட்­சம் பொது­மக்­க­ளின் உயிர்­க­ளை­யும் இரண்டு பக்­கத்­தி­லும் சுமார் 50ஆயி­ரம் போர் வீரர்­க­ளை­யும் இந்­தப் கொடிய போர் பலி­வாங்­கி­யுள்­ளது.

இறு­தி­யில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முல்­லைத்­தீ­வி­ லுள்ள நந்­திக்­க­ட­லில் இந்­தக் கொடூர போர் முடி­வுக்கு வந்­துள்­ளது என்­றார்.

பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரி௧் இது பற்­றிக் கருத்து தெரி­விக்­கை­யில் ‘‘பிர­பா­க­ரன் தான் எவ­ரா­லும் வெல்­லப்­பட முடி­யா­வர்’’ என்ற எண்­ணம் கொண்­ட­வர் எனக் குறிப்­பிட்­டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close