side Add

பௌத்த, ஒற்றையாட்சி- பெரும்பான்மைவாதம்!!

பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கும் அர­ச­மைப்­பின் 9ஆவது சரத்­தில் குறிப்­பி­டப்­பட் ­டுள்ள வாச­கங்­க­ளில் ஒரு எழுத்­துக்­கூட மாற்­றப்­ப­டாத என்று குறிப்­பிட்­டுள்­ளார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட கிளி­நொச்சி மக்­க­ளைப் பார்­வை­யி­டு­வ­தற்­குப் புறப்­பட முன்­ன­தாக கண்டி தலதா மாளி­கை­யில் மகா­நா­யக்­க­ரைச் சந்­தித்­துப் பேசிய போது அவர் இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­னார்.

தலதா மாளிகை இலங்கை பௌத்­தர்­க­ளின் அதி­யு­யர் புனித பீடம். அள­வு­க்க­தி­க­மா­கவே மத மற்­றும் இன­வா­தத்­தால் கட்­டுண்டு கிடக்­கும் பௌத்த சிங்­கள மக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய அதி சக்தி வாய்ந்த இடம். அத­னால்­தான் இலங்­கை­யின் அரச தலை­வ­ராக இருந்­தா­லும் சரி, தலைமை அமைச்­ச­ராக இருந்­தா­லும் சரி பௌத்த துற­வி­க­ளான பிக்­கு­க­ளின் முன்­பாக உடல் தாழ்த்தி, சிரம் தாழ்த்தி வணங்­கு­கி­றா­ர­் கள். அதா­வது ஒரு நாட்­டின் முதல் குடி­ம­கனே தாழ்ந்­து­போ­கும் இடம் இந்த பௌத்த மகா சங்­கங்­கள் என்­பது உல­க­றிந்த உண்மை.

அப்­ப­டி­யான இடத்­தி­லேயே மீண்­டும் ஒரு முறை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தில் மாற்­றம் இல்லை என்­றும் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே தீர்வு என்­றும் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அதன் பொருள் என்­ன­வென்­றால், பௌத்த, சிங்­கள பெரும்­பான்­மை­வா­தத்தை மீற­மாட்­டேன் என்று அவர் சிங்­கள மக்­க­ளுக்கு கட­வுள் சாட்­சி­யாக உறுதி கூறு­கின்­றார் என்­ப­து­தான்.

அத­னா­லேயே பௌத்­தத்­துக்­கான முன்­னு­ரி­மை­யை­யும் ஒற்­றை­யாட்­சி­யை­யும் விட்­டுக்­கொ­டுப்­ப­தற்கு அவ­ரும் சரி ஏனைய தலை­வர்­க­ளும் சரி தயா­ராக இல்லை. இது­தான் பெரும்­பான்­மை­வாத அர­சி­யல்.

ஆனால், இது ஒரு பெரும்­பான்­மை­வாத அர­சி­யல் என்­பதை ஏற்­றுக்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தயா­ராக இல்லை என்­பதை அவ­ரது நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்பு எடுத்­துக் காட்­டு­கின்­றது.

சிங்­க­ளத்­தில் குறிப்­பி­டப்­ப­டும் “ஏக்­கிய ராஜ்­ஜிய” என்ற பதத்­தையே தமி­ழில் ஒற்­றை­யாட்சி என்று கூறிக்­கொண்­டி­ருக்­கி­றார் ­கள், ஆனால் புதிய அர­ச­மைப்­பில் அதன் பொருள் ஒரு­மித்த நாடு, அத­னைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­காக அதற்­கான ஆங்­கி­லப் பதத்­தை­யும் அர­ச­மைப்பு வரை­பில் சேர்த்­துக்­கொள்­ளச் சொல்­லிக் கேட்­போம் என்று கூறி­யி­ருக்­கி­றார் அவர்.

ஆனால், இங்கே நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­யது சொற்­கள் அல்ல. அந்­தச் சொற்­க­ளைச் சிங்­க­ளத் தலை­வர்­கள் கைவிட மறுப்­ப­தன் பின்­னணி என்ன அல்­லது மீண்­டும் மீண்­டும் அவர்­கள் சிங்­கள மக்­க­ளுக்கு வழங்­கும் உறு­தி­மொ­ழி­க­ளில் அந்­தச் சொற்­கள் புதிய அர­ச­மைப்­பில் இருந்து நீக்­கப்­ப­ட­ மாட்டா என்று கூறு­வ­தற்­கான தேவை என்ன என்­ப­து­தான்.

பெரும்­பான்­மை­வா­தத்­தைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கத் ­தான் தலை­வர்­கள் அந்­தச் சொற்­க­ளைக் கைவிட மறுக்­கி­றார்­கள், இறுக்­கிப் பிடித்­தி­ருக்­கி­றார்­கள் என்­கிற உண்­மையை ஏற்க மறுத்­துச் சமா­ளிப்­ப­து­தான் இங்கு பிரச்­சி­னையே.

எதிர்க் கட்­சித் தலை­வர் பத­வியை மகிந்த ராஜ­பக்­ச­வுக்­குத் தூக்­கிக் கொடுத்த போது இதே பெரும்­பான்­மை­வா­தத்தை ஏற்க முடி­யா­து என்று தெரி­வித்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்தே, பௌத்­தத்­துக்­கான முக்­கி­யத்­து­வம் மற்­றும் ஒற்­ற­யைாட்சி என்­ப­வற்­றைக் கைவிட மறுப்­ப­தற்­கான கார­ணம் பெரும்­பான்­மை­வா­த­மல்ல என்­கிற விதத்­தில் விதப்­பு­ரை­கள் வழங்­கப்­ப­டு­வது துன்­பி­யல்.

இன்­னும் ஒன்­றை­யும் கவ­னிக்க வேண்­டும். தனி­நாட்­டுக் கோரிக்­கையை அடி­யோடு கைவிட்­டுத்­தான் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தற்­போ­தைய அமைதி முயற்­சி­க­ளுக்­குள் காலடி எடுத்து வைத்­தது. விட்­டுக்­கொ­டுப்­பு­கள் இன்றி அமை­தியை வெற்றி கொள்ள முடி­யாது என்­பது சரி­தான். ஆனால், அந்த விட்­டுக்­கொ­டுப்பு ஒரு தரப்­பில் இருந்து மட்­டு­மே­தான் இடம்­பெ­ற­வேண்­டுமா, என்­ப­து­தான் கேள்வி. தனி­நாட்டு விட்­டுக்­கொ­டுப்­புக்­குப் பதி­லாக இலங்­கை­யின் ஒற்­றை­யாட்சி நிலையை விட்டு கூட்­டாட்­சிக்கு வரு­வ­தற்­குக்­கூட சிங்­க­ளத் தலை­வர்­கள் தயா­ரில்லை அல்­லது பெரும்­பான்­மை­வா­தத்­தைத் திருப்­திப்­ப­டுத்­தாத எந்­த­வொரு தீர்­வுக்­கும் தயா­ரில்லை என்­கி­ற­போது அதனை நியா­யப்­ப­டுத்­தும் விதத்­தில் நடந்­து­கொள்­வது தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தல்ல.

You might also like