மகனின் காதலால்- கொடூரமாக தண்டிக்கப்பட்ட தாய்!!

மகன் செய்த செயலால் தாயார் ஊரவர்களால் கொடூரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்தச் சம்பவம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் நடந்துள்ளது.

பெண்ணின் மகன் தான் காதலித்த பெண்ணை வேறு ஊருக்கு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வீடு தேடிச் சென்று மிரட்டியதுடன், அவரை அங்கிருந்த மின்கம்பம் ஒன்றுடன் கட்டி வைத்து ஊரவர்களுடன் இணைந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து பெண்ணை மீட்டதுடன், தொடர்புடையவர்களைக் கைது செய்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like