மசூதியில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு!!

ஏமன் நாட்டின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளனர். இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்தவர்கள் பதறியடித்து நாலாபுறமும் ஓடியுள்ளனர். இதற்கிடையே தாக்குதல்களை நடத்தியவர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அத்துடன், அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்தியும் சென்றுள்ளனர்.

தாக்குதலையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து கண்டறியும் தீவிர பணியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like