மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’- படப்பிடிப்பு நிறைவு!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் முதல் படப்பிடிப்புத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரியில் இரண்டாவது படப்பிடிப்புத் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் பரபரப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய படப்பிடிப்புக் கட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்தார் அரவிந்த் சாமி. பின்னர், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என ஒவ்வொருவர் படப்பிடிப்பு நிறைவுபெற,சிம்புவின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. செர்பியாவில் கடைசியாகப் படமாக்கியுள்ளார் மணிரத்னம். இத்துடன் படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close