side Add

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

‘‘இந்த நாட்­டின் பெரும்­பான்­மை­யி­ன­மான பெளத்த சிங்­கள மக்­க­ளை­யும், பெளத்த தேரர்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­க­ளில் அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக மகிந்த கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத் தன­மா­னது. மதத் தலங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளின்றி நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் வகை­யி­லான சட்­ட­மூ­லம் ஒன்றை அரசு தயா­ரித்து வரு­வ­தைத் திரி­பு­ப­டுத்­திக் கூறி, மக்­களை அர­சுக்கு எதி­ரா­கக் கிளர்ந்ெ­த­ழச் செய்­வதே மகிந்­த­வின் நய­வஞ்­ச­கத் திட்­ட­மா­கும். பெளத்த மதத்­தின் ஆதிக்­கம் அர­சி­னுள் நிலை பெற்­று­வ­ரும் நிலை­யில், மகிந்­த­வின் கருத்து வெளி­யா­கி­யுள்­ளது. எந்­த­வொரு நாட்­டி­லும் அர­சின் நட­வ­டிக்­கை­களில் மதம் நுழை­யு­மா­னால் அந்த நாட்­டில் அமை­தியை எதிர்­பார்க்க முடி­யாது. மத ரீதி­யான மோதல்­க­ளைத்­தான் காண­மு­டி­யும்.

இன­வா­தத்தை வளர்க்க முனை­யும்
பௌத்த மதத் தேரர்­கள்

அர­சி­ய­லும், மத­மும் இரு வேறு துரு­வங்­கள். இவை இணை­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. ஆனால் சில நாடு­க­ளில் எதிர்­பா­ராத வகை­யில் அர­சி­ய­லில் மதம் கலந்து பெரும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. எமது நாடும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இலங்­கை­யொரு பெளத்த சிங்­கள நாடு என அர­ச­மைப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தால், பெளத்த தேரர்­கள் அரச நிர்­வா­கத்­தில் தலை­யி­டு­கின்ற செயற்­பா­டு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டின் இனப் பிரச்­சினை மோச­மான கட்­டத்தை எட்­டி­ய­தற்கு பெளத்தமதத் தலை­வர்­க­ளைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். இன­வா­தம் பேசிப்­பே­சியே, இந்த நாடு சீர­ழிந்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இனங்­க­ளுக்­கி­டை­யில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­தும் இன­வா­தம்­தான். இந்த இன­வா­தத்­தின் ஊற்­றுக்­கண்­ணாக பெளத்த மதத் தலை­வர்­கள் உள்­ளமை கண் கூடு. சிறு­பான்­மை­ யி­ன­ருக்கு உரிமையும் எதை­யும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தில் பிடி­வா­த­மா­கச் செயற்­பட்டு வரும் இவர்­கள் நாட்­டைப் பற்றி சிறி­த­ள­வா­வது சிந்­திப்­ப­தா­கத் தெரிய வில்லை.

போரை ஊக்­கு­விக்­கும்
நிலைப்­பாட்­டில் செயற்­ப­டும்
பௌத்த மதத் துற­வி­கள்

தமி­ழர்­க­ளின் பிர­தேசங்க­ளில் மழைக் காளான்­க­ளைப் போன்று பெளத்த விகா­ரை­கள் முளைத்து வரு­கின்­றன. சில பகு­தி­க­ளில் முன்­னர் இருந்து சேத­ம­டைந்த இந்து ஆல­யங்­கள் புன­ர­மைக்கப் படாத நிலை­யில் அந்த இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும் காண முடி­கின்­றது. இதன் பின்­ன­ணி­யில் பெளத்­த­தே­ரர்­கள் சிலர் உள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. அன்­பை­யும், அகிம்­சை­யையும் போதித்த புத்த பெரு­மான், கண்ட கண்ட இடங்­க­ளி­லும் தமது சிலை­களை வைக்­கு­மாறு ஒரு­போ­தும் கூறி­ய­தில்லை. கலிங்க நாட்­டின் மீது படை­யெ­டுத்து அந்த நாட்­டைச் சூறை­யா­டிய மாமன்­னன் அசோ­கன், அழி­வு­க­ளை­யும், உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் கண்டு மனம் வெதும்பி ஆட்­சி­யைத் துறந்து பெளத்­தத்­தைத் தழு­வி­ய­தாக வர­லாறு கூற­கின்­றது. அவ­னது இரண்டு பிள்­ளை­க­ ளான மகிந்­த­னும், சங்­க­மித்­தி­ரை­யும் பெளத்த துற­வி­க­ளாக மாறி அந்த மதத்தை இலங்­கைக்­கும் கொண்டு வந்து பரப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­வ­துண்டு. ஆனால் இங்­குள்ள பெளத்த துற­வி­கள் போர் முனை­க­ளுக்­குச் சென்று படை­யி­ன­ருக்கு ஆசிர்­வா­தம் வழங்­கு­வ­தும், போரை ஊக்­கு­விப்­ப­தும் பெளத்த தர்­மத்­துக்கு முர­ணா­னது.

தமிழ் மக்­க­ளால் பெரி­தும் எதிர்பார்க்­கப்­பட்ட புதிய அர­ச­மைப்­பின் உரு­வாக்­கம் மகா­நா­யக்க தேரர்­க­ளின் எதிர்ப்­புக் கார­ண­மாக கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. இது மீண்­டும் உயிர் பெற்று எழுமா? என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரி­யது. அண்மையில் இடம்பெற்ற சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன் செயல்­க­ளி­லும் பெளத்த தேரர்­க­ளுக்­குப் பங்கு உள்­ள­தென்­பதை மறுக்க முடி­ய­வில்லை. இவை­யெல்­லாம் பெளத்த மதத்­துக்­கும், உண்­மை­யான பௌத்­தர்­க­ளுக்­கும் நிச்­ச­ய­மா­கப் பெருமை சேர்க்­காது.

கட்­டுப்­பா­டற்ற விதத்­தில்
மதத் தலங்­கள் நிர்­மா­ணிப்­ப­தைத்
தடுக்­கும் சட்ட மூலம் நாட்­டின் சகல
மதத்­த­வர்­க­ளுக்­கும் ஏற்­பு­டை­யதே

அரசு தயா­ரி்த்து வரும் கட்­டுப்­பா­டற்ற விதத்­தில் மதத் தலங்­கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தைத் தடுக்­கும் சட்ட மூலம், சகல மதங்­க­ளுக்­கும் பொது­வா­னது. பெளத்த மதத்தை மட்­டுமே கட்­டுப்­ப­டுத்­து­கின்ற ஒன்­றல்ல. தற்­போது மத வழிப்­ப­டுத்­த­லங்­கள் கட்­டுப்­பா­டு­கள் எது­வு­மின்றி கண்ட இடங்­க­ளி­லும் அமைக்­கப்­ப­டு­வ­தைக் காண முடி­கின்­றது.

ஆனால் இந்­தச் சட்ட மூலம் நிறை­வேற்­றப்­ப­டு­மா­ யின், தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் பெளத்த விகா­ரை­களை அமைக்­கும் பணி­க­ளுக்­குத் தடை­யேற்­பட்டு விடு­மென மகிந்த ராஜ­பக்ச அஞ்­சு­வ­தா­கத் தெரி­கின்­றது. இந்த விட­யத்­தில் பெரும்­பான்­மை­யி­ன­ரைத் தூண்­டி­விட்டு அர­சி­யல் ஆதா­யம் பெறு­வதே அவ­ரது நோக்­க­மெ­னத் துணிந்து கூற­லாம்.

பெளத்­தம் தவிர்ந்த ஏனைய மதத் தலை­வர்­கள் மீது பொது­வாக குற்­றச்­சாட்­டுக்­கள் எது­வும் இங்கு எழு­வ­தில்லை. அவர்­கள் தமது பணி­களை அமை­தி­யா­கவே செய்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பெளத்­த­ம­தத் தலை­வர்­கள் அவ்­வா­றின்றி, சகல விட­யங்­க­ளி­லும் குறிப்­பாக அர­சி­ய­லில், தீவி­ர­மாக மூக்கை நுழைத்து வரு­கின்­ற­னர். அர­சி­யல் வாதி­கள் தமது வாக்கு வங்­கி­யைக் கருத்­தில் கொண்டு பெளத்த துறவிகள் சொல்­வ­தற்­கெல்­லாம் தலை­யாட்டி வரு­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே நாட்­டில் குழப்­பங்­கள் நில­வு­வ­தோடு இனங்­க­ளுக்­கி­டை­யில் அமை­தி­யின்­மை­யும் காணப்­ப­டு­கின்­றது.

ஆட்­சித் தலை­வர்­கள் மத­வா­தி­க­ளின் அடி­மை­க­ளாக இருக்­கும் வரை­யில், அவர்­க­ளால் எந்­த­வொரு தீர்­மா­னத்­தை­யும் சுதந்­தி­ர­மாக மேற்­கொள்ள முடி­யாது. இத­னால் நாட்டு மக்­களே பாதிக்­கப்­ப­டு­வார்­க­ளென்­பதை மறுத்­து­ரைக்க முடி­யாது.

You might also like
X