மது போதையில் வாகனம் செலுத்தியவருக்கு -நீதிமன்றம் கொடுத்த தண்டனை!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு தண்டத்துடன் சாரதி அனமதிப்பத்திரத்தையும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைத்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்றம்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மது போதையில வாகனம் செலுத்திய மூவர் நீதிவான் மன்றில் முற்ப்படுத்தினர்.

மதுபோதையில் வரிபத்திரம் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு 6500 தண்டத்துடன் சாரதி அனுமதிப்பத்திரமுமம் 6 மாதகாலத்துக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

மது போதையில் வாகனம் செலுத்திய ஏனைய இருவருக்கு தலா 5000 ரூபா தண்டத்துடன் சாரதி அனுமதிப்பத்திரமும் 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தி நீதிமன்றால். தீர்ப்பளிக்கப்பட்டது.

You might also like