மனநல மருத்துவமனையில் தீ விபத்து- 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மனநல மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like