மனைவியின் பிரசவத்துக்காக – கணவருக்கு 15 நாள்கள் விடுமுறை!!

மனைவியின் பிரவச நேரத்தில் பிறக்கும் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணியாற்றும் ஆண்களுக்கு 15 நாள்கள் விடுமுறை வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.

ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஹரியானா அரசு, பெண்களின் நலன் கருதி அவர்களின் பிரசவ நேரத்தில், அரசுத் துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு 15 நாள்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது.

பொதுவாக பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பிரசவ நேரத்தில் 6 மாதங்கள் வரை விடுமுறை வழங்கும் வழக்கம் இந்தியாவில் இருக்கும் நிலையில், கணவர்களுக்கு விடுமுறை வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close