side Add

மன்னார் ஆயருக்கு -பேசாலையில் சிறப்பு வரவேற்பு!!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு 46 வது ஆண்டு தினம், பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

பங்கு மக்களால் ஆயரை வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆயருக்கு பங்கு மக்கள் சார்பாக நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.

You might also like