மருத்­துவ அதி­கா­ரியே இட­மாற்­றம்  சுக­வீன விடுப்­புக் கைவி­டப்­பட்­டது

பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை.

மகப்­பேற்­றுப் பிரி­வி­லுள்ள மருத்­துவ அதி­கா­ரியே இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார். அத­னால் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்­று­ம­தி­யம்­வரை இடம்­பெ­ற­வி­ருந்த மருத்­து­வர்­க­ளின் சுக­வீ­ன­வி­டுப்­புப் போராட்­டம் கைவி­டப்­பட்­டது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

பருத்­தித்­துறை மருத்­து­வ­மனை அத்­தி­யட்­ச­கர் மருத்­து­வரை இட­மாற்­றம் செய்­ய­வி­டாது தடுத்து நிறுத்­து­கி­றார் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கைகளை முன்­வைத்து மருத்­து­வர்­கள் சுக­வீ­ன­வி­டுப்­புப் போராட்­டம் செய்­ய­வுள்­ள­தாக நேற்­று­முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்­த­னர். அத்­தி­யட்­ச­க­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் கோரி­னர்.

இந்த நிலை­யில் பருத்­தித்­துறை மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து இட­மாற்­றம் பெற­வுள்ள மருத்­து­வரை நேற்­று­முன்­தி­னம் அத்தியட்சகர் விடு­வித்­துள்­ளார். அத­னை­ய­டுத்­துப் போராட்­டம் கைவி­டப்­பட்­டது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை, பருத்­தித்­துறை மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணரே இட­மாற்ற அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார் என்று மருத்­து­வ­மனை அத்­தி­யட்­ச­கர் த.குக­தா­சன் நேற்­று­முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார். மகப்­பேற்­றுப் பிரி­வி­லுள்ள மருத்­துவ அதி­கா­ரியை மருத்­துவ நிபு­ணர் என்று தவ­று­த­லா­கக் கூறி­யுள்­ளேன் என்று அவர் நேற்­றுத் தெரி­வித்­தார். மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை என்று குக­தா­சன் மேலும் தெரி­வித்­தார்.

இது­த­விர, பருத்­தித்­துறை மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து மருத்­துவ அதி­காரி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வேண்­டி­ய­வர். மாற்­றீடு இல்­லாது முன்­னர் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வில்லை. புற்­று­நோய்ச் சிகிச்­சைப் பிரிவு முன்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இயங்­கி­ய­தால் அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வேண்­டி­ய­வர் என்று இட­மாற்­றக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதன்­ப­டியே அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். புற்­று­நோய் சிகிச்­சைப் பிரிவு தெல்­லிப்­ப­ழைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தால் அந்த மருத்­துவ அதி­காரி போத­னா­வி­லி­ருந்து தெல்­லிப்­ப­ழைக்கு உத்­தி­யோக பூர்­வ­மாக இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார் என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் க.நந்­த­கு­மா­ரன் நேற்­றுத் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close