மலையக மக்களுக்காக வவுனியா நபர் சைக்கிள் பயணம்!!

மலையக மக்களின் பெரும் பிரச்சினைகளாக முக்கிய 2 பிரச்சினைகளை உடனடியாக அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியாவைச் சேர்ந்த நபர் சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன், இலங்கையை சைக்கிளில் சுற்றிப் பயணிக்கவுள்ளார்.

இவர் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.

மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்துப் கொடுக்கப்பட வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சைக்கிள் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

2125 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் இவரது பயணம் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழத்தில் நிறைவடையும்.

ஆரம்ப நிகழ்வில் நாடபளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, க.சந்திரகுலசிங்கம்,சு.காண்டீபன், சமூக ஆர்வலர்களான சந்திரகுமார், லம்போதரன்,ஆலயத்தின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like