மழை தொடர்ந்தால் மன்னாரில் சில குளங்களில் நீர் மேவிப்பாயும்

எதிர்வு கூறுகிறது மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு

34

மன்னார் மாவட்டத்தில் மழை தொடர்ந்து நீடித்தால் குளங்களிலிருந்து நீர் மேவிப்பாயும் அல்லது அந்தக் குளங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று மன்னார் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்தனர்.

நாட்­டில் கடந்­த­சி­ல­நாள்­க­ளாக தொடர்ச்­சி­யாக மழை பெய்து வரு­கி­றது. வடக்கு மாக­ாணத்­தி­ல், வன்­னி­யிலும் கன­ ம­ழை­பெய்து வரு­கி­றது. மன்­னா­ரில் கடந்த சில நாள்­க­ளா­கப் பெய்த கடும் மழை­யால் தாழ் நிலப் பிர­தே­சங்­க­ ளான சாந்­தி­பு­ரம், ஜிம்­றோன் நகர், எமில் நகர், உப்­புக்­கு­ளம், எழுத்­தூர், இரு­த­ய­பு­ரம் போன்ற பகுதிகளில் வெள்­ளம் அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. வீடு­கள், வீதி­கள், மைதா­னங்­கள் பேன்­ற­வற்­றில் அதி­க­ள­வில் நீர் சூழ்ந்­துள்­ள­தால் இந்தக் கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­ற­னர். வெள்­ளம் வடிந்து செல்ல முடி­யாத நிலை­யில் மக்­கள் குடி­யி­ருப்புப் பகு­தி­க­ளில் வௌ்ள நீர் தேங்­கிக் காணப்­ப­டு­கின்­றது. இந்த நில­மை­கள் தொடர்­பாக மன்­னார் இடர் முகா­மைத்­து­வப் பிரி­வி­ன­ரி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,

‘‘மன்­னார் மாவட்­டத்­தில் வெள்­ளப் பெருக்­கால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்­கள் தொடர்­பில் இது­வரை எமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை, எனி­னும் மன்­னா­ரி­லுள்ள சிறிய குளங்­க­ளில் நீர் நிரம்­பி ­யுள்­ளது. தொடர்ந்­தும் மழை பெய்­யு­மாக இருந்­தால் அந்­தக் குளங்­க­ளி­லி ­ருந்து நீர் மேவிப் பாயும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­கி­றது. மன்­னார் மாவட்­டத்­தின் மடுப்­பி­ர­தே­சத்­தில் உள்ள சில குளங்­கள் உடைப்­பெ­டுக்­கும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது இங்­குள்ள அனைத்து துரு­சு­க­ளை­யும் திறந்­து­வி­டு­மாறு கூறி­யுள்­ளோம். வெள்­ள­நீரை உட­னுக்­கு­டன் வெளி­யேற்­று­மாறு பணிக்­கப்­பட்­டுள்­ளது. நீர் நிரம்­பி­யுள்ள குளங்­களை அண்­டி­யுள்ள மக்­க­ளுக்கு இது தொடர்­பான அறி­வித்­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்­தும் பாதிப்­பு­கள் ஏற்­ப­டா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன” என்று மாவட்ட இடர்­மு­கா­மைத்­து­வப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.

You might also like