மாணவர்களின் சீருடையை – இல்லாமல் செய்த மைத்திரி!!

“பாடசாலை மாணவர்களின் சீருடையை இல்லாமல் செய்த மைத்திரி, மகிந்த, ரணில் அதிகார சூதாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்“ என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் உரிமை கோரியுள்ளது.

அதேவேளை அந்தச் சுவரொட்டிகளுக்கு அருகாமையில் “வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா“ என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

You might also like