side Add

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை- பாடசாலை அதிபர் கைது!!

வவுனியாவில்  உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவர் வவுனியாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவிகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல்களைக் கொடுத்தார் என்று அதிபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் ஜி.சி.ஈ சாதாரண தர மாணவிகளை, பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளிள் மீது பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு என சிறப்பு வகுப்புக்களை ஏற்பாடு செய்தே அவர் இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டுள்ளார்.

நீண்ட நாள்களாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளனர்.

பெற்றோர்களால் வவுனியாவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று அதிபர் (வயது 55) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like