மிகச் சிறந்த முன்­னு­தா­ர­ணம்!!

பாட­சா­லை­க­ளில் மாண­வர் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­கின்­றது. மாண­வர்­க­ளி­டத்­தி­லி­ருந்து புதிய – நல்­ல­தொரு அர­சி­யல் கலா­சா­ரம் மிளி­ர­வேண்­டும் என்ற நோக்­கு­டன் இது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் பல பாட­சா­லை­க­ளில் மாண­வர் நாடா­ளு­மன்­றம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

வவு­னியா மாவட்­டத்­தின் கன­க­ரா­யன் குளம் மகா­வித்­தி­யா­லத்­துக்­கான மாண­வர் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அண்­மை­யில் நடை­பெற்­றி­ருந்­தது. தரம் 6 இல் கல்வி பயி­லும் மாண­வன் மாது­ள­னும், மாண­வர் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருந்­தான்.

தரம் 6 இன் மூன்று பிரிவு வகுப்­ப­றை­க­ளுக்­கும் தும்­புத் தடி­யும், குப்­பைக் கூடை­யும் வழங்­கு­வேன் என்று தேர்­தல் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தான். தேர்­த­லில் வெற்றி பெற்­ற­தும், முதல்­வே­லை­யாக தான் வழங்­கிய வாக்­கு­று­தியை மாண­வன் நிறை­வேற்­றி­யுள்­ளான்.

தமி­ழர்­க­ளுக்கு அர­சி­யல் ரீதி­யாக சிறந்த தலை­மைத்­து­வம் இல்லை, தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தாங்­கள் வழங்­கும் வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து வழு­வு­வ­தையே வாழ்க்­கை­யா­கக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்று பல­மான குற்­றச்­சாட்­டுக்­கள் சர­ள­மாக எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

அகிம்­சை­யாக முகிழ்ந்த போராட்­டத்­தில், மித­வா­தத் தலை­வர்­கள் தங்­கள் பதவி இருப்­புக்­காக – வாக்கு வங்­கிக்­காக இளை­ஞர்­களை உசுப்­பேத்தி அவர்­களை ஆயு­தங்­கள் தூக்க வைத்­தார்­கள். இளை­யோர் கொள்­கைப் பிடிப்­போடு இலட்­சி­ய­வெ­றி­யோடு போரா­டி­ய­போது, அவர்­க­ளைக் கைவிட்டு, வழங்­கிய வாக்­கு­று­தி­களை மறந்து போயி­னர்.

காலம்­கா­ல­மாக தமிழ் அர­சி­யல் தலை­மை­க­ளி­ன­தும், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளி­ன­தும் போக்­கு­கள் இவ்­வாறு இருப்­ப­த­னால்­தான் இன்­ன­மும் விடிவு கிடைக்­காத இன­மாக தமி­ழி­னம் அழு­து­கொண்­டி­ருக்­கின்­றது.
இவ்­வா­றா­ன­தொரு சூழ­லில், தேர்­தல்­வாக்­கு­றுதி என்­பது வெறு­மனே வாக்­கு­க­ளைக் கவர்­வ­தற்­கான உத்தி­தான் என்று இருக்­கின்ற நில­மை­யில், அதை­யும் தாண்டி 11 வயது மாண­வன் அதை நிறை­வேற்­றிக் காண்­பித்து, நல்­ல­தொரு முன்­னு­தா­ர­ணத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றான்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் அந்த மாண­வ­னி­டம் பாடம் கற்­க­வேண்­டும். தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் தாண்டி, ஆட்­சிக்கு வரு­வ­தற்­காக, தமிழ் மக்­க­ளின் வாக்­குளை அள்­ளு­வ­தற்­காக, வாக்­கு­று­தி­களை அள்­ளி­வீ­சிய நல்­லாட்சி அர­சுக்­கும், 11 வயது மாண­வ­னின் செயற்­பாடு நல்­ல­தொரு பாடம்­தான்.

இளை­யோர், பாட­சாலை மாண­வர்­கள் போதைக்கு அடி­மை­யா­கிச் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர் என்று குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்ச்­சி­யா­கச் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது. அந்­தச் சமு­தா­யத்­தின் எதிர்­கா­லம் எப்­படி அமை­யப் போகின்­றது என்று எண்ணி தலை­யைப் பிய்க்­கும் இந்­தச் சூழ­லில், வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் மனப்­பாங்­கு­கொண்ட மாண­வர் நாடா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளும் வளர்ந்து வரு­கின்­றார்­கள் என்­பது ஆறு­த­லான செய்­தியே.

இளம் சமூ­கத்­தின் பிறழ்­வான நடத்­தை­களை மாத்­தி­ரம் வெறு­மனே விமர்­சித்­துக் கொண்­டி­ருக்­கா­மல், அவர்­க­ளின் ஆக்­க­பூர்­வ­மான, மூத்­தோ­ருக்கே வழி­காட்­டு­கின்ற செயல்­க­ளை­யும் பாராட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். பாராட்­டுக்­கள் நிச்­ச­யம் மாண­வர் சமூ­கத்­தின் மன­தில் மாற்­றங்­க­ளை­யும் உரு­வாக்­கும்.

வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும் நல்­ல­தொரு பிர­தி­நி­தி­கள் எதிர்­கா­லத்­தில் தமி­ழர் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டும். தம்­மால் எது முடி­யுமோ அதை வாக்­கு­று­தி­க­ளாக வழங்­கும் தலை­வர்­கள் வர­வேண்­டும். 11வயது மாண­வ­னின் செயற்­பாடு, எதிர்­கா­லத்­தில் தமி­ழர் அர­சி­யல் அவ்­வா­றான பிர­தி­நி­தி­களை, தலை­வர்­களை பெற்­றுக் கொள்­ளும் என்ற நம்­பிக்­கையை விதைக்­கின்­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close