மிதிபலகை கழன்று வீழ்ந்து- இருவர் உயிரிழந்த சோகம்!!

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தின் மிதிபலகை கடுகண்ணாவையில் கழன்று வீழ்ந்தது. அதில் நடத்துனரும் மற்றுமொருவரும் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்பக்க மிதிபலகை கழன்று வீழ்ந்ததில் அதில் நின்ற இருவரும் முன்சில்லில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடத்துனரின் சடலம் ஹேநாவலை வைத்தியசாலையிலும் மற்றவரின் சடலம் மாவனல்லை
வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

You might also like