மிதிவெடி அகற்றுபவர்கள்- விழிப்புணர்வு ஓட்டம்!!

மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் இன்று காலை விழிப்புணர்வு மரதன் ஒட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் பிரதேசமான முகமாலையில் ஆரம்பமான ஓட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அலுவலகத்துடன் நிறைவடைந்தது.

இதில் கண்ணி வெடி அகற்றும் பெண்கள், ஆண்கள் என சிலர் கலந்து கொண்டனர்.

கண்ணி வெடி அகற்றும் செயற்பாடு தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்குடன் மரதன் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like