முகநூலுக்கு ஒரு மாதம் தடை!!

பிரபல சமூக வலைதளமான முகநூல் பயன்பாட்டுக்கு பப்புவா நியூ கினி நாடு, ஒரு மாதத்துக்குத் தடை விதித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு தொலைதொடர்பு அமைச்சர் சாம் பேஸில் கூறும் போது,

“பப்புவா நியூ கினியில் 10 வீத மக்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அரசு இணையப் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்த வகையில் முகநூல் சேவையை ஒரு மாதம் முடக்குகிறோம். நாட்டின் சைபர் சட்டத்தை முகநூல் எந்த வகையில் எல்லாம் மீறுகிறது என்பதைக் கண்காணிக்க விருக்கிறோம். போலிக் கணக்குகள் வாயிலாக ஆபாசப் பதிவுகளை பதிவேற்றம் செய்பவர்களையும், தவறான தகவல்களைப்
பகிர்பவர்களையும் கண்டறியப் போகிறோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close