முத­லீ­டு­களை கொண்­டு­வர ஜேர்­மன் அர­சு­டன் பேச்சு!!

இலங்­கைக்கு முத­லீ­டு­களை கொண்­டு­வ­ரும் நோக்­கில் ஜேர்­மன் அர­சு­டன் உயர்­மட்ட பேச்­சு­களை நடத்­து­வ­தற்­காக அபி­வி­ருத்தி மூலோ­பா­யங்­கள் மற்­றும் பன்­னாட்டு வர்த்­தக அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தலை­மை­யி­லா­னக் குழு­வொன்று ஜேர்­ம­னுக்கு பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­தாக இலங்கை முத­லீட்­டா­ளர் சங்­கம் அறி­வித்­துள்­ளது.

பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு தனி­யார் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க வேண்­டு­மென்­பது சம­கால அர­சின் பிர­தான நோக்­க­மா­க­வும், குறிக்­கோ­ளா­க­வும் உள்­ளது. இலங்­கை­யில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள விரும்­பும் நாடு­க­ளில் முன்­னிலை நாடாக ஜேர்­ம­னும் உள்­ள­மை­யா­லேயே மலிக் சம­ர­விக்­கிர தலை­மை­யி­லா­னக் குழு அங்கு பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது.

பிராங்­பேர்ட், பெர்­லின், அம்­பார்க் ஆகிய நக­ரங்­க­ளில் இடம்­பெ­றும் முக்­கிய சந்­திப்­பில் மலிக் தலை­மை­யி­லா­னக் குழு கலந்­து­கொள்ள உள்­ள­து­டன், அங்­குள்ள உற்­பத்­தி­யா­ளர்­க­ளு­ட­னும் பேச்­சு­களை நடத்­த­வுள்­ள­னர்.

அத்­து­டன், பிராங்­பேர்ட், பெர்­லின், அம்­பார்க் ஆகிய நக­ரங்­க­ளில் இடம்­பெ­ற­வுள்ள பொரு­ளா­தார மாநா­டு­க­ளி­லும் இந்­தக் குழு கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக இலங்கை முத­லீட்­டா­ளர் சங்­கம் விடுத்­துள்ள அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட் டுள்­ளது.

You might also like