முதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னின் அர­சி­யல் எதிர்­கா­லம்!!

தன்­னு­டைய அர­சி­யல் பய­ணத்­தின் அடுத்த கட்­டத்­தில் தான் தனித்து ஒரு கட்­சியை இப்­போ­தைக்­குத் தொடங்­கப்­போ­வ­தில்லை என்­ப­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். “மக்­கள் இயக்­கத்­தினை வலுப்­ப­டுத்தி மக்­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­வதே எனது நோக்­கம்” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அவர்.

தன்­னைச் சந்­தித்­துப் பேசிய அமெ­ரிக்­கத் துணைத் தூது­வர் றொபேர்ட் கில்­ர­னி­டம் தான் இந்­தக் கருத்­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தார் என்று கூறி­யி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். இதன் மூலம், வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் இந்த மாதத்­து­டன் முடி­வுக்கு வரும் நிலை­யில் முத­ல­மைச்­சர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­கிற அர­சி­யல் எதிர்­பார்ப்­பு­கள் எல்­லா­வற்­றுக்­கும் அவர் முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கி­றார்.

குறிப்­பாக அவர் என்ன செய்­யப்­போ­கி­றார் என்­கிற, எத்­த­கையை தலை­மைத்­து­வத்­தைத் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப் போகி­றார், தற்­போது பத­வி­யி­லுள்ள மைத்­திரி -– ரணில் அர­சுக்கு மாற்­றான பாதை­யில் தமி­ழர்­க­ளின் அர­சி­யலை வழி­ந­டத்­திச் செல்­வ­தன் மூலம் மேற்­கு­லக நாடு­க­ளின் கரி­ச­னை­க­ளுக்கு சவால் விடு­வாரா என்­கிற மேற்கு நாடு­க­ளின் கேள்­வி­கள் பல­வற்­றுக்­கும் பதி­ல­ளித்­தி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருந்து தனி வழியே பிரிந்து செல்­வ­தற்­கான ஆசை முத­ல­மைச்­ச­ருக்கு இருந்­தா­லும் தன்னை ஒரு நேர்­மை­யா­ள­னா­க­வும் தூய்­மை­யா­ள­னா­க­வும் அவர் கட்­டி­யெ­ழுப்­பிக் கொண்ட விம்­பம் அத­னைச் செய்­வ­தற்கு அவ­ருக்கு இட­ம­ளிக்­காது. அதே நேரத்­தில் தன்­னைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குத் தயா­ராக இருக்­கும் அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் சேர்ந்து கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­யலை முன்­னெ­டுத்­துச் சென்­றால் அந்­தக் கட்­சி­கள் தன்னை நடு­வ­ழி­யில் அம்போ என்று தவிக்­க­விட்­டுச் சென்­று­வி­டும் என்­ப­தை­யும் புரி­யா­த­வ­ரல்­லர் முத­ல­மைச்­சர்.

அத்­தோடு ஒரு அர­சி­யல் கட்­சி­யைத் தலைமை தாங்கி நடப்­பது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. அதற்­குத் தனித் திற­மை­யும் சாணக்­கி­ய­மும் சூக்­கும புத்­தி­யும் அவ­சி­யம். நீதி­யைத் தரா­சில் போட்டு நிறுப்­ப­தைப் போன்று விட­யங்­களை அணு­கும் முத­ல­மைச்­ச­ரின் அணு­கு­மு­றைக்கு இவை­யெல்­லாம் கிட்­ட­வும் நெருங்­க­மு­டி­யா­தவை. எனவே ஒரு அர­சி­யல் கட்­சியை ஆரம்­பித்து அதனை வழி­ந­டத்தி முன்­னெ­டுத்­துச் சென்று வெற்­றி­யைப் பெறு­வ­தென்­பது, இந்த வய­தில் சாதா­ர­ண­மா­னது அல்ல என்­ப­தும் முத­ல­மைச்­ச­ருக்­குத் தெளி­வா­கி­யி­ருக்­கும்.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர் தமிழ் மக்­கள் பேரவை என்­கிற அமைப்­பின் ஊடா­கத் தனது அர­சி­யலை நகர்த்­து­வது என்­கிற முடிவை எடுத்­தி­ருப்­பார். இந்த நிலைப்­பாட்­டின் மூலம் அவ­ரால் இரண்டு காரி­யங்­க­ளைச் சாதிக்க முடி­யும். ஒன்று கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­ய­லின் தலை­மைச் சக்­தி­யா­கத் தன்­னைத் தொடர்ந்து நிலை­நி­றுத்­திக்­கொள்­வது. இரண்­டா­வது தான் அர­சி­ய­லில் இருந்து அந்­நி­யப்­பட்­டுப் போகா­மல் தனக்­கான தலை­மைத்­துவ வாய்ப்­பைத் தொடர்ந்­தும் தக்க வைத்­துக்­கொள்­வது. இதன் மூலம் சில வரு­டங்­க­ளின் பின்­னர் அர­சி­யல் கள­நி­ல­வ­ரங்­க­ளுக்கு ஏற்­ப மீண்­டும் முன்­னணி அர­சி­யல் பத­வி­க­ளுக்­குப் போட்­டி­போ­டக்­கூ­டிய தனது வலு­வைச் சேமித்­துக்­கொள்­வது.

இவை­யெல்­லா­வற்­றுக்­கும் மேலாக இப்­போ­தைக்­குக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஓர் அர­சி­யல் கட்­சி­யைத் தொடங்­கா­மல் விட்­ட­தன் மூலம் தமிழ் அர­சி­ய­லின் பால­பா­ட­மான “துரோகி” என்­கிற பட்­டத்­தைத் தாங்­கு­வ­தில் இருந்து தன்­னைப் பாது­காத்­துக் கொண்­டி­ருக்­கி­றார் முத­ல­மைச்­சர். அவ­ரு­டைய அர­சி­யல் பய­ணத்­தில் அவர் சாணக்­கி­ய­மாக எடுத்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு முடி­வாக இத­னைக் கொள்­ள­லாம். இது மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு இருக்­கும் செல்­வாக்கை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கும் உத­வும். ஆனால் அவ­ரது இந்த முடிவு அவரை நம்பி, அவ­ரின் கீழ் குளிர்­கா­யும் எதிர்­பார்ப்­பு­டன் இருந்த பல கட்­சி­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­யும் விச­னத்­தை­யும் கொடுக்­கும் என்­ப­தி­லும் மாற்­றுக் கருத்­தில்லை.

இவற்­றை­யெல்­லாம் சமா­ளித்து தன்னை அடுத்­து­வ­ரும் சில வரு­டங்­க­ளில் நிலை­நி­றுத்­திக்­கொள்­ளும் விதத்­தில்­தான் முத­ல­மைச்­ச­ரின் அர­சி­யல் வெற்றி தங்­கி­யி­ருக்­கி­றது.

You might also like