முருங்கனில் புதிய சந்தைக்கு அடிக்கல்!!

மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் தினச்சந்தை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடம் நிகழ்வில், நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் புவனம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் பிரதிநிதி நடேசானந்தன் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களான ஜொனி மற்றும் திருமதி வோல்ட்சன், மதத்தலைவர்கள், நானாட்டான் பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

You might also like