மூன்றாவது நாளாகவும் போராட்டம்!!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டத்தில் கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன் உள்ளிட்டவர்கள் போராட்ட இடத்துக்குச் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

You might also like