side Add

மைத்திரியின் நிலைப்பாடு வெட்கப்படவேண்டியது

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ளர்­க­ளைச் சந்­தித்து தற்­போ­தைய அர­சி­யல் நிலமை தொடர்­பில் கலந்­து­ரை­யா­டிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ள கருத்து அதிர்ச்­சி­யை­யும் ஏமாற்­றத்­தை­யும் அளிக்­கி­றது. தான் உயி­ரோடு இருக்­கும் வரைக்­கும் வடக்கு, கிழக்கு இணைப்­புக்­கும் கூட்­டாட்­சித் தீர்­வுக்­கும் ஒரு­போ­தும் இணங்­கப்­போ­வ­தில்லை என்று விசத்­தைக் கக்­கி­யுள்­ளார் அவர்.
தன்­னு­டைய மன­தில் கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக மறைத்து வைத்­தி­ருந்த உண்­மையை, உளக் கிடக்­கையை அவர் இப்­போது வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். 2015ஆம் ஆண்டு தை மாதம் முதல் நாட்டு மக்­க­ளுக்கு, குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளுக்கு தான் காட்டி வந்த முகத்­தி­ரை­யைக் கிழித்­துத் தனது உண்­மை­யான சொரூ­பத்­தைக் காட்­டி­யுள்­ளார் மைத்­தி­ரி­பால.
புதிய அர­ச­மைப்பு ஒன்று உரு­வாகி விடாத வகை­யில் அர­ச­மைப்பு வழி­காட்­டல் குழு­வில் அரச தலை­வ­ரின் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கடந்த மூன்று வரு­டங்­க­ளா­கப் புரிந்து வந்த இடைஞ்­சல்­கள், குழ­று­ப­டி­கள், முட்­டுக்­கட்­டை­கள் என்­ப­வற்­றின் பின்­ன­ணி­யி­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இருந்­தி­ருப்­பார் என்­பதை இப்­போது உணர்ந்­து­கொள்­ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.
உள்­ளொன்று வைத்­துப் புற­மொன்று பேசும் இத்­த­கைய தலை­வர் ஒரு­வ­ரைப் பெற்­ற­தற்­காக இலங்கை நாடே வெட்­கித் தலை­கு­னிய வேண்­டும். நேர்­மைத் திற­மும், நேர்­ப­டப் பேசும் நெஞ்­சு­ர­மும் அற்ற ஒரு தலை­வ­ரைத் தேர்ந்­தெ­டுத்­து­விட்டு, இனப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­கான வர­லாற்று வாய்ப்­பாக அவ­ரது ஆட்­சிக் காலத்­தைக் கணித்­த­வர்­கள் அனை­வ­ருமே ஆடை­க­ளைந்த நிலை­யில் நிற்­ப­தைப்­போன்றே உண­ர­வேண்­டி­யி­ருக்­கி­றது.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் அவற்­றோடு இணைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் முஸ்­லிம் கட்­சி­க­ளும் என தீர்­வுக்­கான கால நேரம் கூடி வரு­வ­தா­கப் பன்­னாட்­டுச் சமூ­க­மும்­கூட நம்­பி­யி­ருந்­தது. ஆனால் பாம்­புக்­குப் பால் வார்த்த கதை­யாக முடிந்­து­விட்­டது.
தான் உயி­ரோடு இருக்­கும் வரை­யில் (பத­வி­யில் இருக்­கும் வரை­யில் மட்­டு­மல்ல என்­ப­தைக் கவ­னிக்­க­வும்) வடக்கு –கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புக்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கட்சி அமைப்­பா­ளர்­கள் மத்­தி­யில் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.
வடக்கு– கிழக்கு மாகா­ணங்­கள் இணைந்த தமி­ழர் தாய­கத்­தில் தனி­நாடு அல்­லது தன்­னாட்சி அதி­கா­ரம் கொண்ட கூட்­டாட்சி தீர்வு என்­பதே தமி­ழர்­க­ளின் எதிர்­பார்ப்பு என்­பதை தந்தை செல்வா காலம் முதற்­கொண்டு தமி­ழர்­கள் தெளி­வா­கவே கொழும்­புக்கு எடுத்­து­ரைத்து வரு­கி­றார்­கள். அற­வ­ழி­யி­லும் ஆயுத வன்­முறை வழி­யி­லும் மீண்­டும் அற­வ­ழி­யி­லு­மாக அந்த இலக்கை அடை­வ­தற்­கான போராட்­டத்­தி­லேயே அவர்­கள் ஈடு­பட்­டுள்­ளார்­கள். இத­னைத் தெளி­வா­கத் தெரிந்து வைத்­துக்­கொண்­டு­தான் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­பேன் என்­கிற முழக்­கத்­து­டன் தமிழ் மக்­க­ளின் ஆத­ர­வைத்­தேடி வந்­தார் மைத்­திரி. ஆனால், இன்றோ தமி­ழர்­க­ளின் அடிப்­ப­டைக் கோரிக்­கை­கள் இரண்­டை­யும் முற்­றாக நிரா­க­ரித்து நிற்­கின்­றார்.
இத்­த­கைய நிலைப்­பாட்­டைக் கொண்ட ஒரு தலை­வ­ரின் கீழ், சந்­தி­ரிகா­வின் தீர்­வுப் பொதியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று மகிந்­த­வுக்குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிபந்­தனை விதிப்­பது செல்­லாக்­காசு. அறப் போராட்­டம் தவிர தமி­ழர்­க­ளுக்கு மீட்சி தரும் வழி வேறு ஏது­மில்லை.

You might also like