மோடியின் பிறந்த நாளன்று நாமலுக்கு திருமணம்!!

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 17 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

விளையாட்டு ஆர்வலரும், லங்கா ஸ்போர்ட்ஸ் ரைசனின் (எல்.எஸ்.ஆர்) நிறுவுநருமான திலக் வீரசிங்கவின் ஒரே மகளை நாமல் கரம் பிடிக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தன்று நாமலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like