யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு!!

யாழ்ப்பாண மாவட்ட மூத்த சிறப்பு பொலிஸ் அத்தியட்சகர் இன்று தனது பதவிகளைப் பொறுப்பேற்றார்.

காலி அல்பிட்டியில் கடமையாற்றிய நிஹால் தல்துவ என்பவர், யாழ்ப்பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு நிகழ்வு யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதைகளைத் தொடர்ந்து நிஹால் தல்துவ யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட்டு கடமைகளைப் பெறுப்பேற்றார்.

You might also like