side Add

யாழ் அணி அபாரவெற்றி!!

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களைக் கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையேயான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ் அணி சார்பாக விதுசன் 3 இலக்குகளையும், நிதுசன் 3 இலக்குகளையும் பெற்று கொடுத்தனர்.

95 ஓட்டங்கள் எனும் வெற்றிஇலக்குடன் களம்இறங்கிய யாழ் மாவட்ட அணியினர் 15.4 பந்துப் பரிமாற்றங்களில் மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் யாழ் அணி சார்பாக பாணுசன் அதிகபட்சமாக 31 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்திருந்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக யாழ் அணியின் விதுசன் தெரிவு செய்யபட்டதுடன்,சிறந்த துட்பாட்ட வீரராக யாழ் அணியின் பாணுஜனும். சிறந்த பந்துவீச்சாளராக யாழ் அணியினை சேர்ந்த நிதுசனும் தெரிவு செய்யபட்டிருந்தனர்.

வெற்றிபெற்றவர்களிற்கான கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கப்பட்டன.

You might also like