side Add

யாழ். இந்துக் கல்லூரி -தேசியத்தில் சம்பியன்!!

19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான தேசி­ய­மட்ட கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

கந்­தானை டி மெச­னட் கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. கொழும்பு தர்­ம­பாலா கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி மோதி­யது. 74:39 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் அபார வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி.

குழு­நி­லைப் போட்­டி­க­ளில் யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி அணி கந்­தானை டிமெ­ச­னட் கல்­லூரி அணியை 75:50 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யி­லும், கண்டி கிங்ஸ்­வூட் கல்­லூரி அணியை 65:45 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

காலி­று­தி­யாட்­டத்­தில் கண்டி திருத்­து­வக் கல்­லூரி அணியை 58:51 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யி­லும், அரை­யி­று­தி­யாட்­டத்­தில் பாணந்­துறை லைசி­யம் பன்­னாட்­டுப் பாட­சாலை அணியை 71:52 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

You might also like