side Add

ரணிலின் அழைப்­பும் உண்மை நிலை­யும்

போர்க் காலத்­தில் நாட்­டை­விட்டு வெளி­யே­றிய தமி­ழர்­கள் உள்­ளிட்ட இலங்­கை­யர்­கள் அனை­வ­ரும் நாடு திரும்ப வேண்­டும் என்று நேற்று அழைப்பு விடுத்­துள்­ளார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. நாடா­ளு­மன்­றத்­தில் அவர் இந்­தப் பகி­ரங்க அழைப்பை விடுத்­தார்.

2015ஆம் ஆண்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­போ­தும் அவர் இதே அழைப்பை விடுத்­தார். மாற்­றத்­துக்­கான பெரும் எதிர்­பார்ப்பு நில­விய அந்­தக் கால­கட்­டத்­தில் விடுக்­கப்­பட்ட அழைப்பை ஏற்று நாடு திரும்­பா­த­வர்­கள் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் ஆட்­சிக்கு வரக்­கூ­டும் என்­கிற அச்­சம் பர­வு­கிற இந்­தச் சம­யத்­தில் நாடு திரும்­பு­வ­தற்கு முன்­வ­ரு­வார்­களா என்­பது கேள்­விக்­கு­ரி­யதே!

1980களில் போர் தீவி­ரம் பெறத் தொடங்­கிய காலத்­தில் இருந்து 10 லட்­சத்­திற்­கும் அதி­க­மான தமி­ழர்­கள் நாட்­டை­விட்டு வெளி­யேறி இருக்­கி­றார்­கள் என்று சொல்­லப்­ப­டு­கின்­றது. மூளை­சா­லி­கள் வெளி­யேற்­றம் மட்­டு­மின்றி உழைப்­பா­ளி­கள் வெளி­யேற்­ற­மா­க­வும் இந்த வெளிச் செல்­லுகை இன்­று­ வ­ரைக்­கும் தொடர்ந்­து­கொண்டே இருக்­கின்­றது. புதிய ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்த பின்­ன­ரும்­கூட வடக்கு கிழக்­குப் பகு­தி­க­ளில் இருந்து தமி­ழர்­கள் அக­தி­க­ளாக வெளி­யேற முயற்­சிப்­பது இன்­னும் நிற்­க­வில்லை.

வெளி­நா­டு­க­ளில் அக­தித் தஞ்­சம் கடு­மை­யாக நிரா­க­ரிக்­கப்­ப ­டும் நிலை­யி­லும் இனி­மேல் இலங்­கை­யர்­க­ளுக்கு அர­சி­யல் தஞ்­சம் கொடுக்­க­மாட்­டோம் என்­கிற நிலைப்­பாட்­டில் பல நாடு­கள் கடும்­பிடி பிடிக்­கின்ற நிலை­யி­லும்­கூட தமி­ழர்­க­ளின் புலம்­பெ­யர்வு நின்­ற­பா­டில்லை.

அதற்­குப் பல கார­ணங்­கள் உள்­ளன. அதில் முக்­கி­ய­மா­னது, அர­சி­யல் தீர்வு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட்டு தமி­ழர்­க­ளுக்கு இலங்கை நாட்­டில் நிம்­ம­தி­யான வாழ்­வுக்­கான ஏது நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­டா­த­தும் வடக்கு –கிழக்­கில் வாழும் தமி­ழர்­க­ளுக்­குப் போதிய வேலை வாய்ப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­டா­த­தும்­தான்.

போர் முடிந்த கடந்த 10 வரு­டங்­க­ளி­லும் வடக்கு – கிழக்­கில் பொரு­ளா­தார மேம்­பாடு அடி­மட்­டத்­தி­லேயே இருக்­கின்­றது. உற்­பத்­தி­யில் மிகப் பின்­தங்­கிய பகு­தி­யாக வடக்கு, கிழக்­குப் பகு­தி­களே காணப்­ப­டு­கின்­றன. அதற்­குக் கார­ணம் இங்கு தொழிற்­சா­லை­களோ, பன்­னாட்டு நிறு­வ­னங்­களோ, தொழில்­நி­று­வ­னங்­களோ இல்­லா­மல் இருப்­பது அல்­லது அவற்றை உரு­வாக்­கு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருப்­பது. இத­னால் வறு­மை­யும் வேலை­யில்­லாப் பிரச்­சி­னை­யும் வடக்கு கிழக்­கில் தாண்­ட­வ­மா­டு­கின்­றன.

மற்­றைய மாகா­ணங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் வறு­மை­யும் வேலை­யில்­லாப் பிரச்­சி­னை­யும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே அதி­கம் என்­பதை அரச புள்­ளி­வி­வ­ரங்­களே எடுத்­துக்­காட்­டு­கின்­றன. போதா­த­தற்கு அள­வுக்கு மீறிய அள­வில் படை­யி­னர் வடக்கு – கிழக்­கில் குவிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­னர். இது மக்­கள் மத்­தி­யில் தொடர்ந்­தும் ஒரு­வித அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

படை­யி­ன­ரின் அதி­க­ரித்த இருப்பு தமது பாது­காப்­பைக் கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தா­கத் தமி­ழர்­கள் நினைக்­கும் நிலையே இன்­ன­மும் தொடர்­கின்­றது. கடந்த காலங்­க­ளில் குற்­றங்­களை இழைத்­த­வர்­கள் இன்­ன­மும் சுதந்­தி­ர­மா­கச் சுற்­றித் திரி­யும் நில­மையே இருக்­கின்­றது. குற்­ற­வா­ளி­கள் தண்­ட­னை­யில் இருந்து தப்­பிக்­கும் போக்­குக்கு முடி­வு­கட்­டு­வ­தற்­கான ஏது­நி­லை­கள் எத­னை­யும் காண­மு­டி­ய­வில்லை.

காணா­மற்­போ­ன­வர்­க­ளி­ன­தும் தமி­ழர் அர­சி­யல் கைதி­க­ளி­ன­தும் நிலை தொடர்ந்­தும் நிச்­ச­ய­மற்­ற­தா­கவே உள்­ளது. இவற்­றை­விட முத­லீட்­டா­ளர்­களை வடக்கு, கிழக்கு நோக்­கிக் கவர்­வ­தற்­கான எந்­தச் சிறப்­புத் திட்­ட­மும் இது­வ­ரை­யில் அர­சால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இப்­படி எல்லா வழி­க­ளி­லும் பாத­க­மாக இருக்­கும் நில­மை­யைச் சரி­செய்­வ­தற்கு அதி­கா­ரத்­தில் இருக்­கும் ஆட்­சி­யா­ளர்­கள் நட­வ­டிக்கை எடுக்­கா­மல் புலம்­பெ­யர்ந்து இருப்­ப­வர்­க­ளைத் திரும்பி வரு­மாறு விடுக்­கப்­ப­டும் அழைப்பு வெறும் நடிப்­பும் கண் ­துடைப்­பும் மட்­டுமே! புலம்­பெ­யர்ந்து சென்­ற­வர்­கள் உண்­மை­யி­லேயே இலங்­கைக்­குத் திரும்பி வர­வேண்­டு­மா­னால் அதற்­கு­ரிய சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.

அவர்­கள் தற்­போது வாழும் நாடு­க­ளில் உள்ள அர­சி­யல், சமூக அமை­தி­யா­வது ஆகக்­கு­றைந்­தது ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். அத­னைக் கொண்­டு­ வ­ரு­வ­தற்கு ஆகக் குறைந்து புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்றி அர­சி­யல் தீர்வு ஒன்­றுக்­கான அடித்­த­ளத்­தை­யா­வது இந்த ஆட்­சி­யா­ளர்­கள் ஏற்­ப­டுத்­த­வேண்­டும்.

அத­னைச் செய்­யா­மல், பௌத்த சிங்­க­ளக் கடும்­போக்­கா­ளர்­கள் மீண்­டும் பத­விக்கு வரும் வகை­யில் செயற்­பட்­டுக்­கொண்டு புலம்­பெ­யர்ந்து சென்­ற­வர்­களை இலங்­கைக்­குத் திரும்­பு­மாறு அழைப்பு விடுப்­ப­தில் எந்த நியா­ய­மும் இல்லை.

You might also like