ரௌடி பேபி.. பாடல் சாதனை!!

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடல் யுடியூப்பில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

‘ரௌடி பேபி’ பாடல் கடந்த மாதம் ஜனவரி 2 ஆம் திகதி யுடியுபில் வெளியானது.

ரௌடிபேபி பாடல் தனுஷின் ‘ஒய் திஸ் கொலவெறி பாடலுன் 175 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையை தகர்த்துள்ளது.

தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

‘ரௌடி பேபி’ பாடலை தற்போது 200 மில்லியன் பார்வைகளைப் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் திரைப்பட வீடியோ பாடல்களில் முதல் முறையாக 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது.

ரௌடி பேபி பாடல் தனுஷின் ‘ஒய் திஸ் கொலவெறி பாடலுன் 175 மில்லியன் பார்வைகள் என்ற சாதனையைத் தகர்த்துள்ளது.

You might also like