ரஷ்­யா­வுக்­கான தூது­வ­ராக ஜய­தி­லக அனு­மதி அளித்­தது நாடா­ளு­மன்­றம்

ரஷ்­யா­வுக்­கான தூது­வ­ராகக் கலா­நிதி தயான் ஜய­தி­ல­கவை நிய­மிப்­ப­தற்கு, உயர்­ப­த­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு அனு­மதி அளித்­துள்­ளது.

நீண்ட இழு­பறி நிலைக்­குப் பின்­னர், இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

தயான் ஜய­தி­ல­க­வின் நிய­ம­னத்தை அங்­கீ­க­ரிப்­பது தொடர்­பாக, கடந்த ஜூலை 17 ஆம் திகதி நடந்த உயர்­ப­த­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு­வின் கூட்­டத்­தில் கருத்து முரண்­பாடு இருந்­தது.

நிய­ம­னத்தை அங்­கீ­க­ரிக்­கா­மல் மேல­திக ஆய்­வுக்­காகப் பிற்­போ­டப்­பட்­டது. நேற்று முன்­தி­ன­மும் உயர்­ப­த­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு கூடிய போது தயான் ஜய­தி­லக தொடர்­பாக மேலும் ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று குழு உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

இதை­ய­டுத்து நாடா­ளு­மன்­றக் குழு உறுப்­பி­னர்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைத் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு, நிய­ம­னத்­துக்கு எதி­ரான கார­ணங்­க­ளைத் தெரி­வித்­த­னர்.
அரச தலை­வர் இந்த நிய­மன விட­யத்­தில் அழுங்­குப் பிடி­யில் இருந்­த­மை­யால், நிய­ம­னத்­துக்கு அனு­மதி அளிக்க நாடா­ளு­மன்­றக் குழு முடிவு செய்­தது.

முன்­ன­தாக சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றக் குழு கடந்த ஜூலை 17 ஆம் நாள் தயான் ஜய­தி­ல­க­வி­டம் நேர்­கா­ணல் நடத்­தி­யி­ருந்­தது.

தயான் ஜய­தி­ல­க­வின் நிய­ம­னத்­துக்கு எதி­ராக சிவில் அமைப்­பு­க­ளைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் 115 பேர் கையெ­ழுத்­திட்டு எதிர்ப்பு மனு­வொன்றை உயர் பத­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு­வுக்குச் சமர்ப்­பித்­தி­ருந்­த­னர்.

இத­னால், தயான் ஜய­தி­ல­க­வின் நிய­ம­னத்தை அங்­கீ­க­ரிப்­ப­தில் நாடா­ளு­மன்­றக் குழு இழுத்­த­டித்து வந்­தது. உயர்­ப­த­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு, பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்­கள் ஒப்­ப­மிட்ட எதிர் மனு­வொன்­றைப் பெற்­றது இதுவே முதல் முறை­யா­கும்.

இதில் கையெ­ழுத்­திட்­ட­வர்­க­ளில் பலர் பிர­ப­ல­மா­ன­வர்­கள் என்­ப­தால், இந்த விட­யத்­தைத் தீவி­ர­மாக எடுத்­துக் கொண்­டது.

கோத்­தா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­யி­லும் இவர் முக்­கிய பங்கு வகித்­த­தை­யும் நாடா­ளு­மன்­றக் குழு கவ­னத்­தில் எடுத்­தி­ருந்­தது.

உயர் பத­வி­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றக் குழு­வின் கூட்­டத்­தில், சபா­நா­ய­க­ரு­டன், அமைச்­சர்­கள் ஜோன் அம­ர­துங்க, லக்ஸ்­மன் கிரி­யெல்ல, எரான் விக்­கி­ர­ம­ரத்ன, நிமல் சிறி­பால டி சில்வா, விஜே­தாச ராஜ­பக்ச, மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மாவை சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன், விஜித ஹேரத் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close