ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

வவுனியா சேமமடுகிராமத்தில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யபட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 34 வது நினைவுதினம் சேமமடு கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

சேமமடு பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும்.சேமமடு சன்முகானந்தா வித்தியாலயத்தில் நினைவஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவையொட்டி மரநடுகையும் இடம்பெற்றதுடன், சேமமடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் அன்பளிப்புசெய்யப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம், பிரதேசசபை உறுப்பினர் சிவராஜா, ஓய்வுபெற்ற கிராமசேவகர் முத்துராஜா, மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like