ராயி­டு­வி­டம்  தனித்­தி­றன்

சென்னை சுப்­பர் கிங்ஸ் அணி­யின் தலை­வ­ரான டோனி, அந்த அணி­யின் துடுப்­பாட்ட வீரர் ராயி­டு­வி­டம் தனித் திறமை உள்­ளது என்று தெரி­வித்­தார்.

நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ரில் சென்னை அணிக்­காக சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார் ராயிடு. நாளுக்­கு­நாள் அவ­ரின் ஆட்­டம் மெரு­கே­றிச் செல்­கி­றது.

ஆரம்ப வீர­ராக மட்­டு­மல்­லா­மல் எந்த வரி­சை­யில் கள­மி­றங்­கி­னா­லும் ராயிடு சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்தி விடு­கி­றார். இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே டோனி இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘ராயி­டு­வி­டம் தனித்­தி­றமை உள்­ளது. எந்த வரி­சை­யில் கள­மி­றக்­கி­னா­லும் அவ­ரால் சிறப்­பா­கச் செயற்­பட முடி­யும் இதை நான் நன்­றாக உணர்ந்­தி­ருந்­தேன். பயிற்­சி­யா­ளர் பிளெ­மிங்­கும் என்­னி­டம் ராயிடு தொடர்­பில் இந்த விட­யத்­தைப் பகிர்ந்­துள்­ளார்.

அது அவ­ரின் தனித்­தி­றன். ஆனால், அவரை ஆரம்ப வீர­ரா­கக் கள­மி­றக்க வேண்­டும் என்­பதை தொடர் ஆரம்­பிக்­கும் முன்­ன­ரேயே திட்­ட­மிட்­டி­ ருந்­தேன்’’ என்று டோனி மேலும் தெரி­வித்­தார்.

இந்­தத் தொட­ரில் இது­வ­ரை­யி­லு­மான நில­வ­ரத்­தின்­படி 12 ஆட்­டங்­க­ளில் கள­மி­றங்­கி­யுள்ள ராயிடு 535 ஓட்­டங்­க­ளைக் குவித்­துள்­ளார். ஆட்­ட­ மி­ழக்­கா­மல் 100 ஓட்­டங்­க­ளைப் பெற்­றமை அதி­க­பட்­ச­மாக உள்­ளது. (ம)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close